காதல் திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ வழக்குப்பதிவு; அச்சத்தில் தற்கொலை

 
marriage

வாணியம்பாடியில் மைனர் பெண்ணை கடந்தி திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அச்சத்தில் வாலிபர் தீக்குளித்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அண்ணா நகர் சி.எல் காலனி பகுதியை சேர்ந்தவர் போடி என்கிற திருநாவுக்கரசு (21).கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண் திவ்யா என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். 

வீட்டை விட்டு வெளியில் சென்ற திவ்யா வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெண்ணின் தாய் வாணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கடத்தி திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் திருநாவுக்கரசு மீது போக்சோ வழக்கு பதிவு செய்ததாலும், அவரது தாய் மற்றும் தந்தையை நகர காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வந்ததால் அச்சத்தில் திருநாவுக்கரசு தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. 

இதில் படுகாயம் அடைந்த திருநாவுக்கரசு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்து திருநாவுக்கரசு ஊர்வினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்த நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.