தண்டவாளத்தில் செல்ஃபி - ரயில் மோதி இளைஞர் பலி!!

 
tn

தண்டவாளத்தில்  செல்பி எடுத்த இளைஞர் ஒருவர் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டை புத்தர் நகரை சேர்ந்தவர் வசந்தகுமார். 22 வயதான இவர் கானா  பாடல்களை எழுதி, பாடி வந்துள்ளார். நேற்று மாலை குடியாத்தம் அருகே உள்ள மேல்ஆலத்தூர் ரயில் நிலையத்தின் அருகில் நண்பர்களுடன் சேர்ந்து கானா பாடல் ஆல்பம் எடுத்த வசந்தகுமார், அங்குள்ள தண்டவாள பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.  அப்போது அந்த வழியே வந்த ரயில் மோதி வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.  இதை கண்ட நண்பர்கள் வசந்தகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். 

Death

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்பட்டி ரயில்வே போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இறந்த வசந்தகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

death

முன்னதாக  ஓடும் ரயில்களில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்பவர்கள், தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில் தண்டவாளங்களில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும்  தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.