ரம்ஜானுக்கு பிரியாணி சாப்பிட வந்த தோழி வீட்டில் நகைகளை திருடி விழுங்கி சென்ற இளைஞர்

 
gold

ரம்ஜான் விருந்து வைத்தவர் வீட்டில்1.40 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் பூட்டை திறந்து 8 சவரன் தங்க நகைகள் கொள்ளை

சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் தெருவைச் சேர்ந்தவர் தாட்சாயினி. நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றும் நகைக்கடையில் சாரா என்பவர் மேனேஜராக பணியாற்றுகிறார் . நேற்று முன்தினம் 03.05.22ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேனேஜர் சாரா மற்றும் அவரது வருங்கால கணவர் சையது முகமது அபுபக்கர் ஆகிய இருவரையும்  வீட்டிற்கு அழைத்து ரம்ஜான் விருந்து வைத்துள்ளார் தாட்சாயினி. விருந்து முடிந்து சாரா மற்றும் அவரது வருங்கால கணவர் சையது முகம்மது அபுபக்கர் ஆகிய இருவரும் புறப்பட்டு சென்றபின் தாட்சாயினி வீட்டை சுத்தம் செய்தார். அப்போது படுக்கை அறையில் இருந்த அலமாரி திறந்து கிடந்தது.

அதில் இருந்த தங்கச் செயின் மற்றும் வைர நகை என அலமாரியில் இருந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு தாட்சாயினி அதிர்ச்சியடைந்தார், உடனடியாக சந்தேகத்தின் பேரில் செய்யது முகம்மது அபுபக்கர் மீது சந்தேகம் இருப்பதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் செய்யது முகமது அபுபக்கரை, பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுத்து  பார்த்தபோது அவரது வயிற்றில் நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்யது முகமது அபுபக்கருக்கு 2 முறை இனிமா அளிக்கப்பட்டது, ஆனாலும் நகைகள் வெளியே வரவில்லை.

இரண்டு முறைக்கு மேல் இனிமா கொடுக்க முடியாது எனக்கூறி செய்யது முகமது அபுபக்கரை மருத்துவர்கள் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். இந்த நிலையில் விழுங்கிய 3 நகைகளில் இரண்டு நகைகள் இன்று காலை இயற்கை உபாதை கழிக்கையில், வெளியே வந்துள்ளது. இதையடுத்து  அவற்றை தூய்மை செய்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் செய்யது முகமது அபுபக்கர்  கொண்டு வந்து கொடுத்துள்ளார். மற்றொரு நகை வயிற்றிலேயே உள்ளது. விருந்து வைத்தவர் வீட்டிலேயே நகையை திருடிய செய்யது முகமது அபுபக்கரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.