குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற இருவர் உயிரிழப்பு - 5ற்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

 
tn

கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து குற்றாலத்துக்கு 18 பேர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. 

tn

கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து குற்றாலத்திற்கு 18 பேர் கொண்ட குழுவினர் மினி பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.  மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வாகனம் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மினி பேருந்து  மோதியுள்ளது

tn

இந்த விபத்தில் 5ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் அத்துடன் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் படுகாயம் அடைந்த நபர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி வைத்த லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.