நாயுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்

 
r

 தான் வளர்த்த நாயுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் வாலிபர்.   மனைவி இறந்த சோகத்தில் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்.  வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றபோது நாயுடன் அந்த வாலிபர் தூக்கில் சடலமாக அழுகிய நிலையில் தொங்கியபடி இருந்திருக்கிறார்.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி டவுன் கொச பாளையம் பகுதியில் பட்டு சேலை வியாபாரம் செய்து வருபவர் பாஸ்கர் . இவருக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடியில் கடந்த இரண்டு வருடங்களாக ராஜ் (50)என்ற வாலிபர் வாடகைக்கு குடியிருந்தார்.  டைலர் வேலை பார்த்து வந்திருக்கிறார் ராஜ்.

si

கடந்த நான்கு நாட்களாக தான் வசித்து வந்த வீட்டின் சுவற்றில்,  சென்னையில் இருந்த தன்னுடைய மனைவி இறந்து விட்டதாகவும் இனிமேல் நான் வாழ்வதற்கு விருப்பமில்லை என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டு ஆசையாக தான் வளர்த்த நாயுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் ராஜ் .

தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டு 4 நாட்களுக்கு மேல் ஆகி இருந்த நிலையில் உடல் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி இருக்கிறது. 

 இந்நிலைல்  வீட்டின் உரிமையாளர் பாஸ்கர் வாடகை பணத்தை வாங்குவதற்காக திருப்பி வந்திருக்கிறார்.   அப்போது மேல் மாடியில் குடியிருக்கும் ராஜ் தங்கி இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசியிருக்கிறது.  சந்தேகம் அடைந்த பாஸ்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

 தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி மாடியில் கதவை உடைத்து பார்த்த போது ராஜ் தான் வளர்த்த நாயுடன் ஒரே கயிற்றில்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  அழுகிய நிலையில் இருந்த ராஜ், நாய் உடலை மீட்டுள்ளனர்.  

ராஜ் மரணம் தொடர்பாக  வழக்கு பகுதியில் செய்தி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்