தேர்வில் பார்த்து எழுதியதால் விபரீதம்- ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை

 
suicide

சென்னை பல்லாவரத்தில்  தற்கொலை செய்த  மாணவி பிரேத்தை வாங்காமல் பள்ளி முன்பாக திரண்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவி

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த லதா என்பவரின் மகள் ஹரிணி(17). பல்லாவரம் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு படித்த நிலையில் நேற்று முன் தினம் பள்ளியில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் ஹரிணி பார்த்து எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மாணவியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுகாக அனுப்பிய நிலையில் உறவினர்கள் பிரேத்தை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை பல்லாவரம் தெரோசா  பள்ளி முன்பாக திரண்ட உறவினர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து விசாரிக்க வேண்டும் அதுவரை பிரேத்தை வாங்க மறுத்தனர். இதனால் பல்லாவரம் உதவி ஆணையளர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசிய நிலையில் அங்கு இருந்து கலைந்த உறவினர்கள் பல்லாவரம் காவல் நிலையில் முன்பாக திரண்டுள்ளனர்.