"வலுவான அரசால் சிஸ்டத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும்" - பிரதமர் மோடி

 
tn

புதிய கல்வி கொள்கை இளைஞர்களுக்கு பெரியளவில் சுதந்திரத்தை வழங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

tn

அண்ணா பல்கலைகழகத்தின் 44ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் , நாளைய தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.மாணவர்களின் கனவை நிறைவேற்றி வரும் ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றி. பாரத ரத்னா ஏபிஜே அப்துல் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர். அப்துல் கலாமின் சிந்தனைகள் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டுபவை . தொழில்முனைவோர் அதிகளவில் உருவாகி வருகின்றனர். ரிஸ்க் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்களுக்கான வாய்ப்பை இழந்துவிடுவீர்கள். வலிமையான அரசு தொழில்முனைவோராக விரும்புவர்களுக்கு செவி சாய்க்கிறது, உதவுகிறது;  வலிமையான அரசாங்கம் என்பது யாரையும் எதையும் கட்டுப்படுத்துவது அல்ல.  வழிகாட்டுதல்களை வழங்கி மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது வலிமையான அரசாங்கம். ஒரு வலுவான அரசால் எல்லோரையும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு வலுவான அரசால் சிஸ்டத்தைதான் கட்டுப்படுத்த முடியும். ஒரு வலுவான அரசின் பலமே, தங்களால் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளவும் முடியாது, எல்லாவற்றையும் செய்துவிடவும் முடியாது என்பதை புரிந்துகொள்வதே. ஒரு வலுவான அரசு மக்கள் பங்கேற்புக்கு அதிக இடம் கொடுக்கும்.

tn

அந்தவகையில் புதிய கல்விக் கொள்கை, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு வழங்குகிறது.சூழலுக்கேற்ப முடிவுகளை எடுக்கவும், படிப்புகளை தேர்வு செய்யவும் தேசிய கல்விக் கொள்கை உதவுகிறது.
நமது நாட்டின் தொழில்துறை சர்வதேச நாடுகளில் முன்னணியில் உள்ளது.  இந்தியா கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலர் அந்நிய  முதலீட்டை பெற்றுள்ளது. கொரோனா என்பது எதிர்பாராதது- நூற்றாண்டுக்கு ஒருமுறை உருவாக கூடியது.கொரோனா தொற்று ஒவ்வொரு நாட்டையும் சோதனைக்குள்ளாக்கி இருக்கிறது. கொரோனா பெருந் தொற்றை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது. உலகின் 2-வது செல்போன் உற்பத்தியாளராக நமது நாடு உருவெத்துள்ளது.6 ஆண்டுகளில் மட்டுமே 15,000% ஸ்டார்ட் அப்ஸ் அதிகரித்துள்ளது .ஒட்டுமொத்த உலகமே இந்திய இளைஞர்களை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது . இளைஞர்கள் அனைவரும் கனவு காண வேண்டும். இந்தியாவின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது; உலகளவில் வாய்ப்புகளை உருவாக்கும் நாடாக இந்தியா உருவாகியுள்ளது என்றார்.