திடீரென ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - மக்கள் அலறி அடித்து ஓட்டம்

 
Elephant

கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்ததால் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.  

கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் ஒரு காட்டு யானை இரவு முழுவதும் ஊருக்குள் சுற்றித்திருந்து வந்தது. இந்நிலையில், காட்டு யானை பகலிலும் ஊருக்குள் புகுந்தது. காலையில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அந்த யானை சாலையை கடந்து சென்றது. காட்டு யானையை கண்ட அப்பகுதி மக்கள், அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதேபோல் அந்த காட்டு யானையும் மக்களை கண்டதும் துரத்துவது போல் அங்கும் இங்கும் ஓடியது. இதனால் அந்த பகுதியே பெரும் பரப்ரப்பானது.

உடனடியாக யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
 மேலும் காட்டு யானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.