கோவை சம்பவத்தில் வெளிவந்த ஒரு அதிர்ச்சி தகவல்

 
ச்ச்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.  பரோஸ் இஸ்மாயில்  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவரை கேரள சிறையில்  சந்தித்து பேசி இருக்கிறார்.  ரசித் அலி, முகமது அசாருதீன் ஆகியோரை சந்தித்து பேசி இருப்பதன் நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கடந்த 23ஆம் தேதி அன்று கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அதிகாலையில் கார் ஒன்று வெடித்து சிதறியது.  அந்த காருக்குள் இருந்த மூபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.   கார் வெடித்த இடத்தில் ஆணிகள்,  கோழி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.   இதனால் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடந்தன

வ்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.   கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து 76 கிலோவுக்கு மேல் ரசாயன பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 கோவை சம்பவம் பெரிதாக பீதியை கிளப்பி இருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார் .  இதை அடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஃப்ஃப்

 இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.   கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான பெரோஸ் கேரள சிறையில் இருக்கும் ரசித்அலி , முகமது அசாருதீன் ஆகியோரை சந்தித்து பேசி இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கை தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்புடன் தொடர்பு இருந்ததாக கைதானவர் முகமது அசாருதீன் .  இவரை சந்தித்து பேசி இருப்பதன் நோக்கம் குறித்து போலீசார் தெரிவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.