தனியார் பள்ளி வாகனம் சிலிண்டர் லாரி மீது மோதி விபத்து - துடி துடித்த குழந்தைகள்

 
Accident

சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் தனியார் பள்ளி வாகனம் சிலிண்டர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் சென்ற 10 குழந்தைகள் காயமடைந்தனர்.

நெல்லை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பரிதாப பலி! | Bus  accident near Tirunelveli killed 10 people

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே வாணியங்குடியில் ஸ்ரீ வீரகாளியம்மன் மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. இன்று மாலை பள்ளி வேலை நேரம் முடிந்து  பள்ளி வாகனத்தில் மாணவ, மாணவியரை ஏற்றி கொண்டு சிவகங்கை- திருப்பத்தூர் சாலையில் பள்ளி பேருந்து சென்றுகொண்டிருக்கிறது. அப்போது பெருமாள்பட்டி விளக்கில் எதிரில் வந்த சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது பள்ளி வாகனம் மோதிவிபத்திற்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த  10 பள்ளிக்குழந்தைகள் லேசான   காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்   

பள்ளி வாகனத்தின் இன்சூரன்ஸ் காலாவதியாகி இரண்டு வருடங்கள் ஆகிய நிலையில் உரிய ஆவணங்களும் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விபத்து குறித்து வட்டார போக்குவரத்து துறை  அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  பழைய வாகனத்தில்  பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்றதும் விபத்து எற்பட்டதும்  பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.