கோவை, திருப்பூர் கோவில்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த போன்கால்

 
m

திருப்பூர் மாநகரத்தில் உள்ள கோவில்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்பட்டு இருக்கிறது .  போலீசார் தீவிர விசாரணை நடத்தி போனில் பேசிய அந்த நபரை  பிடித்து விசாரித்த போது அவர் லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்திருக்கிறது.  உண்மையிலேயே கோவை, திருப்பூர் கோவில்களில் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக பேசிக் கொண்டிருந்தார்களா என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து திருப்பூரிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் திருப்பூர் மாநகரத்தில் கோவில்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த ஃபோன் கால் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

au

 சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வாலிபர் ஒருவர் நேற்று இரவு போன் செய்திருக்கிறார் .  அப்போது திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் பகுதியில் இருக்கும் டாஸ்மார்க் பாரில் இருந்து பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.  தனக்கு அருகே மது அறிந்து கொண்டிருந்த இரண்டு பேர் திருப்பூர் படியூரில் இருக்கும் முருகன் கோவில்,  கோவை மருதமலை முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப் போவதாக பேசிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களை பிடித்து நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லிவிட்டு போனை துண்டித்து இருக்கிறார்.

 இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.   அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பூர் காந்திநகர் பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கினை சோதனை இட்டு இருக்கிறார்கள்.    போன் செய்த நபரின் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் செல்போனில் பேசிய அந்த நபர் திருப்பூர் அண்ணா நகரை சேர்ந்த சரவணன் என்ற வாலிபர் என்பது தெரிய வந்திருக்கிறது .

இன்று காலையில் அவரை பிடித்து விசாரித்த போது தான்,   அவர் லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்திருக்கிறது.   உண்மையிலேயே இரண்டு பேர் டாஸ்மாக் பாரில் கோவிலில் குண்டு வைத்து தவிர்க்கப்போவதாக பேசினார்களா? இல்லை மனநிலை பாதிப்பால் சரவணன் இப்படி சொன்னாரா என்று தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கோவை கார் வெடிப்பு சம்பவத்தார் திருப்பூர் மாவட்டத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றன.  இந்த நிலையில் திருப்பூர் மாநகர் கோயில்களில் குண்டு வைத்து தாக்கப் போவதாக வந்த தகவலால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.