மருந்து வாங்க மெடிக்கல் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்

 
கும்பகோணம்

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே செயல்படும் ஆங்கில மருந்து கடையில் இரவு மருந்து மாத்திரைகள் வாங்க வந்தவர் வாயில் நுரை தள்ளி திடீரென மயங்கி அங்கேயே உயிரிழந்தார்.

விசாரணையில் இறந்தவர் பெயர் மாரியப்பன் (45)என்றும், இவரது ஊர் செருகடம்பூர் எனவும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர்கள் வந்ததும் இறந்தவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூக்குரல் எழுப்பினர். இதனை தொடர்ந்து ஆங்கில மருந்து கடை மூடப்பட்டது.

மருந்து, மாத்திரை வாங்க வந்தவர் இறந்து மருந்து கடை வாசலிலேயே கிடக்கும் நிலையில், மருந்து மாத்திரைகள் வாங்க வந்தவர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் மருந்து மாத்திரைகள் வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். மேலும் மருந்து கடை நடத்துபவரும் வாசலில் ஒருவர் இறந்து கிடக்கிறார் என்பது பற்றி கவலைப்படாமல் மருந்து, மாத்திரைகளை விற்பதிலேயே கவனம் செலுத்த உள்ளார்.

காவல்துறையினர் வெள்ளை துணி வாங்கி வந்து உடலை மூடினர். மேலும் இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது . இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.