ஆந்திராவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை ?

 
monkeypox

ஆந்திர மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருந்ததை அடுத்து, அந்த குழந்தையின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

உலகச் சுகாதார நிறுவனம் அளித்த தகவலின்படி, உலக அளவில் 63 நாடுகளில் 9,000க்கும் அதிகமானோருக்குக் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி இந்தியாவிலும் ஒருவருக்கு  முதல் முறையாக குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு வந்த நபரை திருவனந்தபுரம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அவருக்கு குரங்கம்மை அறிகுறி இருந்ததை அடுத்து, அவரது ரத்தமாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் இந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் தொடர்பில் இருந்துவர்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு குரங்கம்மை அறிகுறி உள்ளது கண்டறியப்பட்டுளது. சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திரா வந்த அந்த குழந்தைக்கு குரங்கம்மை அறிகுறி இருந்துள்ளது. இதனையடுத்து அந்த குழந்தையின் மாதிரிகளை புனேயில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். குரங்கம்மை அறிகுறி கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த குழந்தை தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குழந்தையின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.