ஒரு மாத குழந்தைக்கு மது கொடுத்து சித்திரவதை செய்த தாய்

 
p

பிறந்து ஒரு மாதங்களுக்கு ஒரு மாதமே ஆகி இருக்கும் அந்த  பச்சிளம் குழந்தையை வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைத்து தானும் மதுவை குடித்துக் கொண்டே அந்த பச்சிளம் குழந்தையை அடித்து துன்புறுத்தி இருக்கிறார் தாய்.   இதனால் அவர் அந்த குழந்தையின் தாய் தானா என்ற சந்தேகம் அப்பகுதியினருக்கு எழுந்திருக்கிறது.   இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவித்து குழந்தை தற்போது போலீஸ் மற்றும் மருத்துவமனையில் பாதுகாப்புடன் இருக்கின்றது.  அந்தப் பெண் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

 திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு வாரமே ஆகி இருக்கும் ஆண் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அந்த குழந்தைக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி இருக்கிறார்.   மதுவை ஊற்றிவிட்டு தானும் மதுவை குடித்திருக்கிறார்.   பின்னர் போதையில் அந்த குழந்தையை போட்டு அடித்து சித்திரவதை செய்திருக்கிறார். 

xz

 மது குடித்த அந்த குழந்தை மயங்கியிருக்கிறது.    இதை பார்த்த அப்பகுதி வியாபாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.   உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் இருந்த குழந்தையை பறித்து இருக்கிறார்கள்.  இது யார் குழந்தை என்று கேட்டதற்கு,  என் குழந்தை தான்.  பிறந்து 15 நாட்கள் ஆகிறது என்று சொல்லி இருக்கிறது.   தான் கரூரிலிருந்து வருவதாகவும் அப்பெண் சொல்லி இருக்கிறார்.

 ஆனாலும் போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.    50 வயது பெண்ணுக்கு பச்சிளம் குழந்தை இருப்பதால் ஒரு பக்கம் சந்தேகம் இருக்க,  பெத்த இந்த பச்சிளம் குழந்தைக்கு மது குடிக்க வைத்து தானும் குடிப்பதோடு அல்லாமல் மேற்கொண்டு பையில் மேலும் சில மது பாட்டில்களை வைத்திருந்ததையும் கண்டு போலீசார் திடுக்கிட்டு இருக்கின்றனர்.

 இதை அடுத்து அந்த குழந்தையை உடனே திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் . மருத்துவ பரிசோதனையில் அந்த ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் தான் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  அந்த குழந்தையை  தூக்கிச் சென்ற போது போதையில் இருந்த அந்த பெண் அது என் குழந்தை.. என் குழந்தை... என்று தள்ளாடிக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்.

 மகளிர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அந்த குழந்தை உண்மையிலேயே அந்த பெண்ணின் குழந்தை தானா? இல்லை கடத்தப்பட்ட குழந்தையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.