மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

 
mks-talin-4

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu CM MK Stalin to visit Delhi on March 31 to meet PM Modi, Amit  Shah - India Today

இதுதொடர்பாக அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் வெளியிட்டுள அறிவிப்பில், “முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" 10-01-2023 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி அளவில் நடைபெறும்,  அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.அன்றைய தினமே அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு  செய்யப்படும். ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கமாகும் , ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும் , மேற்கொள்ளப்பட இருக்கின்ற பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவுப்புகளும் இடம் பெறும். அதனைத் தொடர்த்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைமுன்னிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடதக்கது.