நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய வாலிபர்

 
suicide

ஜெயங்கொண்டம் அருகே நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய வாலிபர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

West Bengal: 19-year-old MBBS student jumps to death from 4th floor of  hotel in

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் கிராமத்தை சேர்ந்த அலமேலு என்பவரது முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் அணிந்திருந்த ஃபேண்டால் கழுத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக ஆடு மாடு மேய்க்க சென்றவர் பார்த்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  

தகவல் அறிந்து ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ  இடத்திற்கு சென்று நிர்வாண நிலையில் இரந்தத ஆடவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் யார் அவர் ? எப்படி இங்கு வந்தார் ? எப்படி இறந்தார்? யாரேனும் கொலை செய்து மாட்டி விட்டனரா ? அல்லது அவராக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? எந்த ஊரைச் சார்ந்தவர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பெயர் முகவரி ஏதும் தெரியாததால் போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.