குடிபோதையில் தன்னை தானே கண்ணாடி பாட்டிலால் குத்திக்கொண்ட வாலிபர்

 
Murder

சென்னை ஓட்டேரி பகுதியில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் தன்னைத்தானே கண்ணாடி பாட்டிலால் வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஓட்டேரி காவல் நிலைய சரகம் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை பி.எஸ்.மூர்த்தி நகர் சி-பிளாக் முன்பு அப்துல்லா என்பவர் குடிபோதையில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக தகராறு செய்து கொண்டிருப்பதாக  புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

 இதனை அடுத்து உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் சம்பவ இடம் சென்று அவரை பிடிக்க முயன்ற போது கையில் வைத்திருந்த பாட்டிலை உடைத்து கழுத்தையும் வயிற்றையும் தனக்கு தானே அறுத்துக் கொண்டார்.

 தடுக்க முயன்ற போது உதவி ஆய்வாளரின் வயிற்றில் குத்த முயன்ற போது அவரது யூனிபார்ம் வயிற்று பகுதியில் வெட்டுப்பட்டு கிழிந்துவிட்டது, உதவி ஆய்வாளருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

அதன் பின்னர் போலீசார் சிலர் வந்து அவரை மடக்கி பிடித்து கைகளை கட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையில் அப்துல்லா நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அவரது மனைவி ஷீலா வேறொரு திருமணம் செய்து கொண்டு சென்றுள்ளார். சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வெளியான அப்துல்லா மீண்டும் தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு பிரச்சனை செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. போலீசார் தடுக்க முயன்றும் கண்ணாடி பாட்டில்களால் கழுத்தையும் உடலிலும் சரமாரியாக வெட்டிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. எதற்கும் அஞ்சாமல் உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் சாதுரியமாக பேசி மற்ற போலீசாருடன் சேர்ந்து மடக்கிப் பிடித்ததன் மூலம் குடிபோதையில் அப்துல்லா கழுத்தை அறுத்துக் கொள்ளாமல் மடக்கிப்பிடித்து காப்பாற்றியதற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.பிடிபட்ட அப்துல்லா மீது மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது