வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!!

 
rain

 வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்க கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருவ மழை மேலும் தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரி காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.