காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற காதலன்

 
tn

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை காதலன் தீவைத்து கொன்ற சம்பவம் திருப்பூரில் அரங்கேறி உள்ளது

திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் அருகே லோகேஷ் என்பவரை பூஜா என்ற 19 வயது இளம்பெண் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து பூஜா தனது காதலன் லோகேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் காதலி பூஜாவை பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனை பாளையம் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார் . இதையடுத்து நேற்று மாலை இளம் பெண் ஒருவர் உடலில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசருக்கு தகவல் அளித்தனர்.

fire

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூஜாவை மீட்டு  அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து விசாரணையில் பூஜா  ராயர்பாளையத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தில்,  காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும்,  இதனால் ஆத்திரத்தில் தன்னை சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

tn

இதையடுத்து காணாமல் போன லோகேஷ் போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பல்லடம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.  பூஜா 90 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இதன் காரணமாக காதலியை உயிருடன்  பெட்ரோல்  ஊற்றி எரித்த காதலன் லோகேஷ்  அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.