கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே.. கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 
kl

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவருக்கு  பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.  கலைத்தாய் பெற்றெடுத்த பெரும் கலைஞனே என்று வாழ்த்தியிருக்கிறார் .

நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று.   இதை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

ku

 முதல்வர் மு .க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.  ‘’தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும்,  மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவருமான அன்புத்தோழர்  கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.  கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!’’என்று வாழ்த்தி இருக்கிறார்.

 கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் வாங்கி வெளியிட்டிருந்தது.   இதை அடுத்து கமல்ஹாசன்-மணிரத்னம் இணைந்து நடிக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜியாண்ட் நிறுவனமும் பங்கேற்று தயாரிக்கிறது.  கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார்.