தமிழ்நாட்டை குழப்புவதற்காகவே ஒரு கவர்னர் வந்திருக்கிறார் - வைகோ காட்டம்..

 
vaiko

தமிழ்நாட்டை குழப்புவதற்காகவே ஒரு கவர்னர் வந்திருக்கிறார்;  அவரைப் போன்றவர்கள் தேவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ ஒரு வருடம் கொரோனா இருந்ததால்  வரவில்லை.  மூன்று வருடம் நான் சிறைச்சாலையில் இருந்ததனால் வரவில்லை.   46 வருடம் தொடர்ந்து வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளேன்.   அவர் கடைப்பிடித்த ஒழுக்கம்;  சொல் ஒன்று செயலொன்று இல்லை என்ற அந்த இலக்கணம்,  அப்படிப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க;  என்று சொல்லி அவருக்கு ஆண்டுதோறும் இங்கே வந்து மலர் அஞ்சலி செலுத்துகிறோம்.  அவர் பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒரே நாள் என்பது தேவர் ஜெயந்தியின்  சிறப்பு .

rn ravi

தேவர் புகழ் வாழ்க..  எல்லா சமுதாயங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; சகோதரத்துவத்தை பேண வேண்டும்; சாதி மதத்துக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.  அதை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.  தமிழ்நாட்டை குழப்புவதற்காகவே ஒரு கவர்னர் வந்திருக்கிறார். அவர் அபாண்டமாக  அவதூறாக பேசுகிறார். அவரைப் போன்றவர்கள் தேவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.