சென்னையில் துணிவு படம் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழப்பு

 
Death

சென்னையில் துணிவு திரைப்படத்தின் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn

தயாரிப்பாளர் போனி கபூர் , எச்.வினோத் கூட்டணியில் நடிகர் அஜித் மீண்டும் நடித்துள்ள திரைப்படம் துணிவு . மஞ்சு வாரியர், ஜான் கொகேன்,  நயனா சிங் ,  மகாநதி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

death


துணிவு திரைப்படம் வெளியாவதை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கம் முன்பு துணிவு கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வாரிசு பேனர்  மீது பட்டாசு , தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வீசி அஜித் ரசிகர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் , விஜய் கட் அவுட்களையும் அடித்து உடைத்தனர். இந்நிலையில் சென்னையில் துணிவு படம் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரோகிணி திரையரங்கம் முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது.