மது போதையில் சாலையை கடக்க முடியாமல் தள்ளாடும் மாணவி

 
student

தருமபுரி அருகே மது போதையில் சாலையை கடக்க முடியாமல் தள்ளாடும் மாணவியின் வீடியோ வைராலாகி வருகிறது.

studen

இண்டூர் பேருந்து நிலைய பகுதியில் மது போதையில் தள்ளாடியபடி மாணவி ஒருவர் சாலையை கடக்க முடியாமல் தடுமாறி நிற்கிறார், உடன் வந்த மூன்று மாணவிகள் சாலையோரம் நின்றுவிடுகிறார், அங்கிருந்த பொதுமக்கள் யாரோ இதனை தங்களது செல்போனில் இதை வீடியோ எடுத்திருக்கின்றனர், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைராலக தொடங்கியிருக்கிறது.

இண்டூர் சுற்றளவிற்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு டாஸ்மாக் கடை இல்லாத நிலையில் மாணவிக்கு மது பாட்டில் கிடைத்தது எப்படி என்பது தெரியவில்லை. சம்மந்தபட்ட மாணவி இண்டூரிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோரம் வகுப்பு படித்து வருவது தெரியவந்துள்ளது,  பள்ளியில் ஆசிரியரை மிரட்டுவது.. ஒழுங்கீனமாக நடந்துகொள்வது.. மது குடிப்பது.. சிகரட் புகைப்பது. மேஜை நாற்காலிகளை நொறுக்கி தள்ளுவது என பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், மது போதையில் மாணவி தள்ளாடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.