மதுரை கள்ளக்காதல் ஜோடி மதுராந்தகத்தில் தூக்கிட்டு தற்கொலை

 
h

மதுரையைச்சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி மதுராந்தகத்தில் தூக்கிட்டு தற்கொலை

வயதில் மூத்த பெண்ணுடன் இளைஞர் கள்ள உறவு வைத்திருந்திருக்கிறார்.  இவர்களின் உறவுக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.   இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த இந்த கள்ளக்காதல் ஜோடி மதுராந்தகம் வந்து வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அடுத்த சிலவாட்டம் கிராமம்.   இக்கிராமத்தின் வயல்வெளியில் உள்ள வேப்ப மரத்தில் ஆண் பெண் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர்.   இதை பார்த்த அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் போலீசார் விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.   

mu

 இதன் பின்னர் வேப்ப மரத்தின் கீழ் கிடந்த பையை சோதனை செய்ய போது,  அதிலிருந்த அடையாள அட்டையை வைத்து போலீசார் ஆய்வு செய்த போது,  அவர்கள் இருவரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.  திருமங்கலம் தாலுக்கா பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி(23) என்பதும்,  சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி(35) என்பதும் தெரிய வந்திருக்கிறது.

 கடந்த நாலாம் தேதி இருவரும் மாயமாகி இருப்பதாக அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார்  பதிவாகியுள்ளன.  அருள் ஜோதியும் முத்துலட்சுமியும் மதுராந்தகத்தில் ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள் என்று போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில்,  இருவரும் கள்ளக்காதலர்கள் என்பதும் வயதில் மூத்த  பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மதுரையில் இருந்து மதுராந்தகத்திற்கு வந்த கள்ளக்காதல் ஜோடி இங்கே வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறது தெரிய வந்திருக்கிறது.