கோவை மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு

 
கோவை மாவட்ட தலைவர்

கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

bjp covai district leader balaji uthama ramasamy arrest | பாஜக கோவை மாவட்ட  தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது – News18 Tamil

கோவையில் நடந்த பாஜக கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி,  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை ஒருமையில் பேசி, மிரட்டல் விடுத்தார்.  மேலும் தமிழக முதல்வர்,  தந்தை பெரியாரை குறித்து அவதூறான கருத்துகளை பேசினார். இந்த விடியோ வைரல் ஆன நிலையில் திமுக நிர்வாகி ஆனந்தகுமார் என்பவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். 

புகார் அடிப்படையில் கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது கலகத்தை தூண்டுதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி சார்பில் ஜெ.எம்.2-ல் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலாஜி உத்தம ராமாசாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது ஜாமின் மனு விசாரணை மாவட்ட  அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்தார்.