உலக ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழர்

 
ஆணழகன் ராஜேந்திரன் மணி ஆணழகன் ராஜேந்திரன் மணி

தாய்லாந்து நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் என்று சென்னை சேர்ந்த தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

tamilan body builder rajendran - YouTube

சென்னை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மணி. இவர் மாடம்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். தாய்லாந்து நாட்டில் உள்ள புகேட் நகரில் நேற்று உலக ஆணழகன் போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 44 நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. இந்த போட்டியில் 'ஹெவி வெயிட்' பிரிவில் 100 கிலோ எடை கொண்ட போட்டியாளர்களுக்கான பிரிவில் ராஜேந்திரன் மணி கலந்து கொண்டார்.

தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ராஜேந்திரன் மணி ஐந்தாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்தியாவுக்காக இவர் நான்கு முறை உலக ஆணழகன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐந்தாவது முறையாக ஆணழகன் பட்டம் வென்றுள்ள ராஜேந்திரன் மணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்