"தமிழ்நாடு என்ற பெயரை ஏற்காததால் காமராஜர் வீழ்ந்தார்" - ஆ. ராசா எம்.பி

 
a

காமராஜர் தமிழ்நாடு என்ற பெயரை சொல்லவில்லை அவருக்கு வீழ்ச்சி துவங்கியது, இன்று சிலர் சொல்ல மறுக்கிறார்கள் அவர்களுக்கும் வீழ்ச்சி துவங்கியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா தெரிவித்துள்ளார்.

a

தமிழ்நாடு இயல்,இசை, நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் பொங்கல் விழா, இசை சங்கமம் நிகழ்ச்சி இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, “திராவிட மாடல் என்ற பெயரை உச்சரிக்கமுடியாத உதடுகள் இந்த மண்ணை விட்டு ஓட வேண்டிய சூழலில் இதனை ஏற்படுத்தியுள்ளது சிறப்பு. இந்த பொங்கல் திராவிட இனத்தின் அடையாளம் . திராவிடம் என்றால் தமிழ்.. அதில் கவிப்பாட மூன்று கவிஞர்கள் வந்துள்ளார்கள். கலைஞருக்கு எது அடையாளம் மொழியை முன்னிருந்தி இனத்தை காப்பது, பாரதிதாசனை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா? காதலை பாடியவர்கள் இயற்கையை பாடியவர்கள் அதிகம். சமூகத்தை பாடியவர்கள் குறைவு. சமூகத்தை பற்றி அதிகம் பாடியவர் பாரதிதாசன்.

இறுதிக்காலக்கட்டத்திலும் விபூதி பூசாதவர் கலைஞர். புத்தரிடம் கேட்டார்கள் ஒருவன் இறந்துவிட்டால் உயிர் எங்கே போகிறது என்று அதற்கு அவர் ஒரு மறு கேள்வியை கேட்டார்,  ஒரு விளக்கு அணைந்தது என்றால் ஒளி எங்கே போகிறது என்று ? கவிதை என்பது மொழியினை இன்னொரு வகையாக கையாள்வது. இயல், இசை, நாடகமன்றம் என பெயர் வைத்தார் கலைஞர். தமிழகத்தில் பல அணைகளை கட்டியவர், பல பிரதமர்களை உருவாக்கியவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் என்ற பெருமையெல்லாம் காமராஜருக்கு இருந்தாலும், அவர் தமிழ்நாடு என்ற பெயரை சொல்லவில்லை. அவருக்கு வீழ்ச்சி துவங்கியது. இன்று சிலர் சொல்ல மறுக்கிறார்கள் அவர்களுக்கும் வீழ்ச்சி துவங்கியுள்ளது” என்றார்.