மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன்; என்ன மன்னிப்பு கேட்க வேண்டும் சொல்லு டா லூசு சங்கி- ஆ.ராசா

 
A raja

திமுக இலக்கிய அணி சார்பில் தலைவர் தளபதியின் தீரமிகு மடல்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தி நகரில் உள்ள சர்.பி.டி தியாகராயர் அரங்கில் நடைபெற்று வருகிறது. 

BJP condemns provocative statements of DMK MP A Raja against Hindus

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் ,ராஜ கண்ணப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கு பெற்றுள்ளனர். மேலும் கழக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். 

அப்போது பேசிய அவர், “இந்துக்களுக்கு நாம் ஒருபோதும் எதிரிகள் அல்ல, இந்துவின் பெயரால் இருக்கக்கூடிய சனாதான தத்துவத்திற்கு நாம் எதிரானவர்கள். கடிதத்திற்கென்று ஒரு பாரம்பரிய வரலாறு உண்டு உலக அளவில் இந்தியாவில் ஜவஹர்லால் நேரு அவருடைய மகள் இந்திரா காந்தி எழுதிய கடிதம் முக்கியமானது. 1962 இவிகே சம்பத்க்கு நேரு எழுதிய கடிதம் முக்கியமான ஒன்று. தமிழகத்தில் இந்தியை திணிக்க மாட்டோம். கலைஞர் கருணாநிதி கடித்ததை படித்தால் உலக வரலாற்றை தெரிந்துக்கொள்ளலாம் எந்த கல்லுரிக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, சாராயம் கூட குடிப்பது தப்பில்லை ஆனால் சாதரனமாக நல்லவனாக இருக்காதே, ஒரு கொள்கைக்காக நல்லவனாக இருக்க வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் மூவரின் கலவையாக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார். மன்னிப்பே கேட்க மாட்டேன் என்று சொல்பவன் மனிதனல்ல. மன்னிப்பு கேட்க நான் தயராக இருக்கிறேன். என்ன மன்னிப்பு கேட்க வேண்டும் சொல்லு டா லூசு சங்கி.” எனக் கூறினார்.