கணவனின் நண்பருடன் கள்ளக்காதல்! 11 மாத குழந்தையை தவிக்கவிட்டு ஓடிய இளம்பெண்

 
கள்ளக்காதல்

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாது மகன் சின்ன பையன்(20), கட்டிட மேஸ்திரியான இவர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். பாப்பாரப்பட்டி கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்கு மார். கட்டிட மேஸ்திரியான இவரும் தனது மனைவி சங்கீதா(20) மற்றும் 11 மாத பெண் குழந்தையுடன் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். 

பென்னாகரம் இன்று பரபரப்பு: கள்ளக்காதலியுடன் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை  || DHARMAPURI NEWS Death of a young man who drank poison with his girlfriend

இந்நிலையில், சின்னபையனுக்கும், சந்தோஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சந்தோஷ்குமாரின் வீட்டிற்கு அவர் அடிக்கடி சென்று வந்தார். அப்போது, சங்கீதாவுக்கும், சின்னபையனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன் குழந்தை, கணவரை தவிக்கவிட்டு சின்னபையனுடன் சங்கீதா ஓட்டம் பிடித்தார். அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதனிடையே இன்று காலை உறவினர்களை தொடர்பு கொண்ட சின்னபையன் தான் சங்கீதாவை அழைத்து வருவதாகவும் காவல் நிலையத்தில் வைத்து  பேசி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது உறவினர்கள் அங்கு வந்த போது  சின்னபையன் மற்றும் சங்கீதாவும் வந்தனர். அப்போது, திடீரென கள்ளக்காதல் ஜோடி வாந்தி எடுத்த நிலையில் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் விஷமருந்தி இருப்பதாக கூறினர். 

இதனையடுத்து, அவர்களை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு இருவரும்சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.