திருத்தணி முருகன் கோயிலில் தரிசனத்துக்காக வந்த 7 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு

 
death

திருத்தணி முருகன் கோயிலுக்கு உடல்நல பாதிப்புக்காக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பிரார்த்தனை நிறைவேற்ற பெற்றோருடன் வந்த 7 வயது சிறுவன் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Prayagraj Horror: Five of family, including minor, 'beaten' to death

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு திருவண்ணாமலை மாவட்டம் பையூர்கிராமத்தைச் சேர்ந்த பசுபதி மற்றும் அவரது உறவினர் வெங்கடேசன் என்பவருடன் தன்னுடைய 7 வயது மகன் ரித்திக்குடன் வேண்டுதலை நிறைவேற்ற வந்துள்ளார். குழந்தை ரித்திக்கிற்கு உடல் நிலை பாதிப்பு காரணமாக இன்று கோயிலுக்கு வந்த போது சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.  

இதனையடுத்து மலைக்கோயிலில் உள்ள அவசர சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் ரித்திக் பரிதாபமாக உயிரிழந்தான்.  உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்குவேண்டுதலை நிறைவேற்ற வந்த இடத்தில் மூச்சுத்திணறலால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.