பெற்றோர் முடி வெட்ட சொன்னதால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

 
suicide

சிவகங்கையில் பெற்றோர் முடி வெட்ட சொன்னதால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை‌ பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசித்து வரும் இளையராஜா (பழம் வியாபாரி). ஆனந்தவல்லி தம்பதியரின் மகன் வேல் என்ற வேல்முருகன்  வயது ( 15 ). கல்குறிச்சி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வேல்முருகன் அதிகமாக தலையில் முடி வளர்த்து கொண்டு ஸ்டைலாக ஊர் சுற்றியுள்ளார். பெற்றோர் முக்கியமாக அவருடைய அம்மா முடியை வெட்டி விட்டு வாடா என்று கூறியுள்ளார். உடனே வேல்முருகன் சலூன் சென்று  தற்போது சிறுவர்கள் வெட்டும் ட்ரெண்டிங்கில் உள்ள பாக்ஸ் கட்டிங் எனப்படும் புல்லிங்கோ ஸ்டைலில் முடி வெட்டிவிட்டு வந்துள்ளார். 

இதைபார்த்து கடுப்பான அவரது அம்மா பார்த்து திட்டிவிட்டு நீ போய் திருப்பி ஒழுங்காக முடி வெட்டிவிட்டு வா என திட்டி, அவர் அண்ணன் மற்றும் நண்பர்களை பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்துவிட்டு பழ வியாபாரத்திற்கு சென்று விட்டனர். முடியை ஒட்ட வெட்டி கூட்டிக்கொண்டு வீட்டில் விட்டு போய்விட்டனர். சோகத்தில் இருந்த சிறுவன் மாடிக்கு சென்று தாயாரின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.  சிறுவனின் சகோதரி சாப்பிட அழைக்க சென்ற போது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் சொல்லி உள்ளனர். மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. முடிவெட்ட சொன்னதற்காக சிறுவன் தற்கொலை செய்து கொண்டு இறந்தது இப்பகுதியில் மிகுந்த ஆழ்ந்த சோகத்தை எடுத்துவிட்டது.