தம்பி செல்போன் கொடுக்க மறுத்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

ஈரோடு அருகே 3-ஆம் வகுப்பு பயிலும் தம்பி, செல்போன் கொடுக்க மறுத்ததால் 9-ம் வகுப்பு பயிலும் அக்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

suicide

ஈரோடு மாவட்டம் காளமங்களம் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுனர் முத்துசாமி என்பவரின் 14 வயது மகள் தர்ஷினியும், 8 வயது மகன் அஸ்வினும் தந்தையின் செல்போனில் கேம் விளையாடுவது தொடர்பாக, வழக்கம் போல் சண்டையிட்டுள்ளனர். தம்பி செல்போனை கொடுக்க மறுத்ததால், வீட்டிற்குள் சென்று தாளிட்டு கொண்ட தர்ஷினி நீண்ட நேரமாகியும் திறக்காததால், கதவை உடைத்து பார்த்த போது  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

சிறுமியின் சடலத்தை மீட்ட மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.