அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

 
suicide

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கஜசுபமித்ரா, பள்ளியின் இரண்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

12-year-old boy commits suicide in Kolkata

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் கஜ சுப மித்ரா (14). இன்று பள்ளியின் இரண்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதில் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இன்று தமிழ் இரண்டாம் பருவநிலை தேர்வு நடைபெற்றது. தேர்வின் போது மாணவி கையில் பிட் பேப்பரை வைத்துக் கொண்டு தேர்வு எழுதியதால் அதனை கண்ட ஆசிரியை அந்த மாணவியை கண்டித்து பெற்றோரை அழைத்து வரும்படி கூறியதாக தெரிகிறது, இதனால் செய்வதறியாத அந்த மாணவி இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் காயம் அடைந்த மாணவி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.