மெரினா அருகே புதிய தலைமை செயலகம்- 3.82 ஏக்கரில் 96 வீடுகள் இடிப்பு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நந்தனம் கோட்டம் வெளியிட்ட டெண்டரில் சொல்லப்பட்டுள்ள மயிலாப்பூர் Foreshore Estate 3.82 ஏக்கர் என்ற இடம் தான் புது தலைமைச் செயலகம், சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலம் 1958-ல் அரசால் கையகப்படுத்தப்பட்டது. 1963 முதல் 1968 வரை அங்கு 1112 அரசு ஊழியர் குடியிருப்புகள் + 96 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. பின்னர் 1986-ல் 60 வீடுகள், 1998-ல் 112 வீடுகள் என மொத்தம் 1380 வீடுகள் இருந்தன. இதில் 1284 வீடுகள் பழையதாகி, இடிந்து விழும் நிலைக்கு வந்ததால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டு, இடம் காலியாக இருந்தது. இப்போது மிச்சம் இருக்கும் கடைசி 96 வீடுகளை இடிக்கத்தான் டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் மதிப்பு ரூ.41,61,785/- இந்த 3.82 ஏக்கர் தனி இடம் இல்லை. இது மிகப்பெரிய 25.16 ஏக்கர் மெகா திட்டத்தின் ஒரு பகுதி!
சமீபத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த படி, தமிழக அரசின் புதிய சட்டசபை - தலைமைச் செயலக வளாகம் Foreshore Estate-ல் தான் வரப்போகிறது. 25.16 ஏக்கரில், 15 மாடி கட்டிடம், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புது சட்டசபை, செயலகம். இதன் மதிப்பு: ரூ.1200 கோடி! வீட்டு வசதி வாரியத்தின் 21.37 ஏக்கர் + மாநகராட்சியின் 0.93 ஏக்கர் + வருவாய்த்துறையின் 1.73 ஏக்கர் சேர்த்து மொத்தம் 25 ஏக்கர். அதாவது, கோட்டை கொத்தளத்தில் இருக்கும் தற்போதைய செயலகம், Foreshore Estate-க்கு மாறுகிறது. இது முதலமைச்சரின் இல்லத்திற்கு எதிரிலேயே வருகிறது.
மெரினா கடற்கரையை ஒட்டிய இந்த இடம், வணிக மண்டலமாக மாற்றப்பட உள்ளதால் சென்னையின் முகமே மாறும். இதற்கு எதிராக மீனவ கிராம பஞ்சாயத்துகள் CMDA-விடம் மனு கொடுத்துள்ளனர், CRZ விதிமுறைகளை சுட்டிக்காட்டி. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் இதற்கு எதிரான PIL-ஐ தள்ளுபடி செய்துவிட்டது.

