அடேங்கப்பா... ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா?
Aug 1, 2024, 19:30 IST1722520802902

சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றில் அதிகபட்ச பயணிகளை ஈர்த்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 95.35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது மெட்ரோ ரயில் தொடங்கியதில் இருந்து பயணம் செய்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். அதிகபட்சமாக ஜூலை 12ஆம் தேதி 3,50,545 பயணிகள் மெட்ரோ ரயில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11,01,182 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகம் பயணம் செய்துள்ளனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை என மாதத்திற்கு அதிகபட்சமாக 86 லட்சம் பயணிகளே ஒரு மாதத்தில் பயணம் செய்த நிலையில், ஜூலையில் 10 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர்.