#Breaking 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% தேர்ச்சி - பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

 
tn

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

school
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில்  பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது 

school

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.  இதில்   91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.67 சதவீதத்துடன் மாவட்டம் முதலிடத்தில் உள்ளநிலையில் , 97.53 சதவீதத்துடன் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்திலும்  , 96.22% விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

முழு விவரம் இதோ 

➤ 91.39 % மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி

➤ மாணவியர் தேர்ச்சி விகிதம் - 94.66%

➤ மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 88.16%

➤ மாற்றுத்திறனாளிகள் - 89.77%

➤ சிறைவாசிகள் - 42.42%

➤ அரசு பள்ளிகள் - 87.45%

➤ அரசு உதவிப்பெறும் பள்ளிகள் - 92.24%

*