9 ஆண்டுகால போராட்டம்... முதல்வர் விஜய்யால் கிடைத்த தீர்வு - முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடிகை ஷர்மிலி..!

 
1

 ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள தனது கணவர் சொக்கநாதனின் பூர்வீக சொத்து அபகரிக்கப்பட்டதாக நடிகை ஷர்மிலி மதுரை போலீஸ் ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் ராமநாதபுரம் அக்ரஹாரம் தெரு பாலகிருஷ்ணன், சந்திரசேகர், மகேஸ்வரன், நாகேஸ்வரன் ஆகியோர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். இதன் நகலை பெற ராமநாதபுரம் வந்த நடிகை ஷர்மிலி கூறியதாவது: ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர் கோயில் அருகே வணிக வளாகம் உள்ளது.

இது என் கணவரின் பூர்விக சொத்து. அதில் வாடகைக்கு இருந்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் அவர்கள் பெயருக்கு கடையை மாற்றிவிட்டனர். இதை மீட்பதற்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக சட்டரீதியாக போராட்டம் நடத்தினோம். ஆனால் எவ்வித பலனும் இல்லை. 3 மாதங்களுக்கு முன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்தோம். அதன்பின் போலீசார் வழக்கப்பதிவு செய்துள்ளனர். பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர், பட்டா வழங்கிய தாசில்தார், போலி ஆவணங்கள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம் என்றார்.