சாலையில் ஓடிக்கொண்டிருந்த காரில் திடீர் தீ- நூலிழையில் உயிர்தப்பிய 9 பேர்

 
கார்

சென்னை தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது-32) இவரது மைத்துனர் மற்றும் சித்தப்பா குழந்தைகளுடன் தனது உறவினர் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்று விட்டு அங்கிருந்து இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் வழியாக பள்ளிக்கரணையை நேக்கி அருண்குமார் வாகனத்தை ஓட்டி வந்துகொண்டிருந்த போது சந்தோஷ் புறம் அருகே திடீரென வாகனத்தில் இருந்து புகை வந்தது,உடனே வாகனத்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அதில் பயணித்த ஒன்பது பேரும் காரில் இருந்து இறங்கினர், இறங்கிய சிறிது நேரத்தில் வாகனம் மல மல வென தீ பற்றி எரியத் தொடங்கியது. 

இதைக் குறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு விரைந்து சென்ற தாம்பரம் தீயணைப்பு துறை மற்றும் பயிற்சி மையத்தைச் சேர்ந்த இரண்டு வாகனங்கள் வந்து போராடி தீயை அணைத்தனர். கார் முற்றிலும் இருந்து சேதம் அடைந்தது.இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வாகனம் தீ பற்றியதுக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக இரண்டு பெண்கள் 5 குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் வாகனத்தை விட்டு இறங்கியதால் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் உயிர் தப்பினர்.