#BREAKING 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 
tn govt

முருகானந்தம், தர்மேந்திர பிரதாப், இன்னசென்ட் திவ்யா,  சிவராசு உள்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் சாய்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலராக டி.மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஸ்ரேயா சிங் தொழில்கல்வித் துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்), தாகரே சுபம் ஞானதேவ் ராஜ் நியமனம், சுற்றுலாத் துறை இயக்குநர் ஜெயசீலன் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக ராஜகோபால் சுங்கரா நியமனம், விருதுநகர் ஆட்சியராக இருந்த சுகபுத்ரா சென்னை குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.