தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

 
tn govt

விஜயகுமார் ஐஏஎஸ்: தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அருண் ராய் ஐஏஎஸ்: உயர்கல்வித்துறைச் செயலாளராகப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

சுப்பையன் ஐஏஎஸ்: ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயா ஐஏஎஸ்: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் இருப்பிட ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ்: சுற்றுலாத்துறை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அருண் தம்புராஜ் ஐஏஎஸ்: செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளம்பகவத் ஐஏஎஸ்: சேலம் மாவட்ட ஆட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிருந்தா தேவி ஐஏஎஸ்: கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உமாநாத் ஐஏஎஸ்: தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் (நுகர்பொருள் வாணிபக் கழகம்) தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிரடிப் பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.