9 ஆட்சியர்கள் அதிரடி பணியிடமாற்றம்
Updated: Jan 31, 2025, 16:13 IST1738320234253

திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேபோல் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு துறை சார்ந்த இயக்குநர்கள் மற்றும் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் துணை முதலமைச்சரின் செயலாளர், துணை செயலாளரையும் மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ் நியமனம்
- திண்டுக்கல் ஆட்சியராக சரவணன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ் குமார் நியமனம்
- விழுப்புரம் ஆட்சியராக ஷேக் அப்துல் ரஹ்மான், நெல்லை ஆட்சியராக சுகுமார் நியமனம்
- திருவண்ணாமலை ஆட்சியராக தர்பகாராஜ், திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன் நியமனம்
- திருவாரூர் ஆட்சியராக சிவசௌந்தரவள்ளி, சேலம் பட்டுவளர்ப்பு இயக்குநராக சாந்தி நியமனம்
- திண்டுக்கல் ஆட்சியராக இருந்த பூங்கொடி
- வணிகவரி இணை ஆணையராக நியமனம்
- தொழில் நுட்பக் கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம்
- கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக கண்ணன் நியமனம்