காதலை தாய் கண்டித்ததால் 8-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் பார்த்ததற்காக அண்ணன் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

சென்னை கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் உமாபதி (வயது 40). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவரது 12 வயது மகள் அசோக் நகரில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று பள்ளியை முடித்துவிட்டு மதியம் வீட்டிற்கு வந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  ஃபேனில் சேலையில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதியம் உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்த தந்தை, மகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி காவல் ஆய்வாளர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட தகவலாக எட்டாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகவும், தினமும் அவருடன் செல்போனில் உரையாடி வந்ததால், கண்டித்த தாய், தந்தையர் செல்போனை பிடுங்கி வைத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு வந்து கோவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.