8வது தேர்ச்சி போதும்..! தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை! சம்பளம் ₹57,000 வரை..!

 
jobs
நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகை தமிழ்நாடு அரசு வேலை
பதவி அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 01
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 07.10.2026
கடைசி தேதி 06.11.2026

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.15,700 – 57,000/-

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி, மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: ஆதி திராவிடர் (SC) – 18 முதல் 35 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

1) விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

2) பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணபத்தினை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி), கன்னியாகுமரி மாவட்டம் – 629 001.

3) விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

4) வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும். தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும்.

5) முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

6) காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.

7) தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த விபரங்கள் நேர்காணல் கடிதம் (Call Letter) மூலம் தனியே அனுப்பி வைக்கப்படும்.