வருகிற 8ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!

 
ttn

ஓணம் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு வருகிற 8ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Onam

ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  ஓணம் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . அன்று பள்ளி , கல்லூரிகள் , அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே குறைந்த அளவு பணியாளர்கள் இருப்பர் என்றும் மாவட்ட ஆட்சியர் வினித் தெரிவித்துள்ளார். முன்னதாக ஓணம் திருநாளை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.