8-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை

 
rape

செங்கல்பட்டு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு  திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

rape


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி கடந்த 15 ஆம் தேதி முதல் காணவில்லை என சிறுமி தந்தை வெங்கடேசன் மதுராந்தகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (25).என்பவர் சிறுமியை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிரவீன் குமார் மற்றும் அவர் நண்பர் லக்மசுதன் என்பவரும் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றதாக தெரியவந்தது


கடத்தப்பட்ட சிறுமி மற்றும் பிரவின்குமார், லக்மசுதன் ஆகிய மூன்று பேரும் கோயம்புத்தூர் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர்.  சந்தேகத்தின் பெயரில் சுற்றித்திரிந்த அவர்களை கோயம்புத்தூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் சிறுமியை கடத்தி வந்து பாலியல் தொல்லை கொடுத்து தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மதுராந்தகம் போலீசார் மூன்று பேரையும் அழைத்து வந்து விசாரணை செய்து சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த பிரவீன்குமார் மற்றும் லக்னசுதன் ஆகிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.