8 வழிச்சாலை திட்டம் : எதிர்க்கவோ, ஆதரிக்கவோ இல்லை.. தீர்வு காணுங்கள் என்றுதான் சொன்னோம் - எ.வ.வேலு..

 
ev velu

கடந்த ஆட்சியில் 8 வழிச்சாலைத் திட்டத்தை திமுக   ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். 

8 வழிச்சாலை திட்டம் : எதிர்க்கவோ, ஆதரிக்கவோ இல்லை.. தீர்வு காணுங்கள் என்றுதான் சொன்னோம் - எ.வ.வேலு..

மதுரையில் கட்டப்பட்டு வரும்  கலைஞர் நூலகத்தின்   கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை  அமைச்சர்  எ.வ.வேலு  மற்றும் பத்திரப்பதிவுத்துறை  பி.மூர்த்தி ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.  அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி அக்டோபர் மாதம் 10 ம் தேதிக்குள்  நிறைவடையும். பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன் முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு திறப்பு விழா பற்றி முதல்வர் முடிவு செய்வார்.

 எ.வ.வேலு! கடந்த ஆட்சியின்போது  சேலம் - சென்னை   8 வழி சாலை விவகாரத்தில் விவசாயிகளை, பொதுமக்களை  நேரில் அழைத்து பேச வேண்டும்.. குறைகளை  தீர்க்க வேண்டும் என்றுதான் கூறினோம். அது சட்டப்பேரவை குறிப்பிலேயே உள்ளது.  நேரில் அழைத்து பேசவில்லை. பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றுதான் கூறினோமே தவிர, திட்டத்தை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. 8 வழி சாலை விவகாரம் என்பது கொள்கை முடிவு. அதுபற்றி அமைச்சர் முடிவு எடுக்க முடியாது. தமிழக அரசு தான் முடிவெடுக்க முடியும். 8 வழி சாலை அமைக்க வேண்டும் என நான் பேட்டியும் தரவில்லை. அறிக்கையும் கொடுக்கவில்லை. ” என்று தெரிவித்தார்.