மதுராந்தகத்தில் 893 பேர் தபால் வாக்குகள் பதிவு
Updated: Sep 28, 2026, 20:14 IST1790606644074
மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 893 பேர் தபால் வாக்கு அளித்துள்ளனர்
மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான தபால் வாக்குப்பதிவு கடந்த 22ஆம் தேதி முதல் நடைபெற்றது. மதுராந்தகத்தில் தபால் வாக்குகளை பெற 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. படிவம் 12D மூலம் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். மதுராந்தகம் இடைத்தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என 893 பேர் தபால் வாக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்களிக்காதவர்களில் சிலர் மருத்துவமனையில்
இருந்தனர். கடந்த 22ம் தேதி முதல் தகுதியான வாக்காளர்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டன. பதிவான வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

