தமிழ்நாட்டில் 84.69% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் நடைபெற்ற SIR பணிகள் காரணமாக முதல்முறையாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 85% வாக்குகள் பதிவாகியுள்ளன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட சுமார் 29 லட்சம் வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன. 2011 சட்டமன்றத் தேர்தலில் 78.29% வாக்குகள் பதிவானதே இதுவரை இல்லாத உச்சபட்ச அளவாக இருந்தது. SIR பணிகள் காரணமாக 70 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது 85% வாக்குகள் பதிவாகியுள்ளன. அரியலூரில் 86.81%, செங்கல்பட்டில் 85.07%, சென்னை 83.62%, கோவையில் 84.70% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடலூரில் 85.35%, தருமபுரி 90.11%, திண்டுக்கல்லில் 88.79%, ஈரோட்டில் 90.10%, கள்ளக்குறிச்சி- 88% வாக்குகள் பதிவாகியுள்ளன. காஞ்சிபுரத்தில் 87.34%, கன்னியாகுமரி 75.61%, கரூரில் 92.66%, கிருஷ்ணகிரியில் 85.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுரை- 80.53%, மயிலாடுதுறை - 82.02%, நாகை - 86.25%, நாமக்கல்- 89.85%, பெரம்பலூர்- 85.50% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுக்கோட்டை- 83.83%, ராமநாதபுரம் - 76.89%, ராணிப்பேட்டை- 89.59%, சேலத்தில் 90.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. சிவகங்கையில் 76.46%, தென்காசி- 82.24%, தஞ்சை- 80.41%, நீலகிரியில் 78.88%, தேனியில் 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. திருவள்ளூர்- 83.66%, திருவாரூர்- 83.61%, ்்தூத்துக்குடி- 80.50%, திருச்சி- 85.44, நெல்லை - 77.88% வாக்குகள் பதிவாகியுள்ளன.

