விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 82.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 3,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவராக இருந்தனர். வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றதை தொடர்ந்து 95,536 ஆண்களும், 99,944 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 15 பேர் என மொத்தம் 1,95,495 பேர் வாக்களித்துள்ளனர். சதவீத அடிப்படையில் 82.48 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 276 வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவு:. வாக்குகள் பதிவான 552 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதிகாலைக்குள் அனைத்து பெட்டிகளும் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஸ்டாங் ரூமில் வைக்கப்படும். வாக்கு எண்ணுவதற்கு அனைத்து ஏற்படும் தயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் சி.ஆர்.பி.எப் வீரர்களும் இரண்டு மற்றும் மூன்றாவது அடுக்கில் தமிழக போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இன்று பதிவான வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் அதுவரை வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினருடன் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.