80 கி.மீ பேரிகார்ட், லாரிகளில் ஆட்கள்... விதியை மீறியதா தவெக? தேர்தல் ஆணையத்தில் குவிந்த புகார்!

 
1

தேர்தல் பிரசாரத்தின் போது தவெகவினர் அதிகளவில் விதிகளை மீறிச் செலவழித்துள்ளதாக மதுரையைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அயம்லன் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு சென்றபோதும், சாலைவலம் வந்தபோ தும் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 80 கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலையின் இருபுறமும் பேரிக்காடுகள் அமைத்தது. உயரமான கொடிக்கம்பங்கள் நட்டது. வெளியூர்களில் இருந்து லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் மூலம் ஆட்களை வரவழைத்தது மற்றும் தாரைதப்பட்டைகளுடன் வரவேற்பு அளித்தது எனப்பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் பிரசாரத்துக்காக ரூ.10 லட்சம் மட்டுமே செலவழிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள நிலையில், விதிகளை மீறிப் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் வீடியோ குழுக்கள் மூலம் பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்து, இந்தச் செலவுகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விதிகளை மீறி அதிகப்படியாகச் செலவு செய்துள்ள தவெக வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கவேண்டும் என்றும் அந்த மனுவின் அவசரமாகக் கோரப்பட்டுள்ளது.